ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் என்றால் ஒரு பொருளுக்கு ஒரே விலை ஏன் வழங்க முடியாது - தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் வெங்கடேஷ்
- by செய்திக் குழு
- Dec 22, 2024
ராமநாதபுரம் யாஃபா தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 35 வது பொதுக்குழு கூட்டமானது மாநிலத் தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதை ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா நாகேந்திர சேதுபதி துவக்கி வைத்தார்.
பின்னர் மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை போற்றி பரிசு பொருட்கள் வழங்கி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஜிஎஸ்டி குறித்தான புத்தகமும் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக பொதுக்குழு கூட்டத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் மருத்துவ முகாம் மூலம் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில் திரளான தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் வெங்கடேஷ் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் என்றால் ஒரு பொருளுக்கு ஒரு விலை ஏன் வழங்க முடியாது என மத்திய மாநில அரசை கடுமையாக சாடினார்.