ஸ்ரீ ஆவுடையா நாயகி அம்பாள் திருக்கோவிலில் திருமுறைத் திருவிழா

பொன்னமராவதி அருள்மிகு ஸ்ரீ ஆவுடையா நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவிலில் திருமுறைத் திருவிழா சிவவாத்தியம் முழங்க நடைபெற்றது. இதில் பெண்களின் கோலாட்டம், கும்மியாட்டத்துடன் நடைபெற்ற நால்வர் வீதி உலா புறப்பாடு , திருமுறை திருவிழா மற்றும் கைலாய காட்சி பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆவுடையநாயகி அம்பால் சமேத ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில். இப்பகுதியில் பிரசித்தி பெற்ற 1000ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலாகும். இக்கோவிலில் இன்று நால்வர் வீதி உலா புறப்பாடு, திருமுறைத் திருவிழா, கைலாய காட்சி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக வேள்வி அமைத்து கணபதி ஹோமம், நால்வர் அபிஷேகம், நடராசர் அலங்காரம், உட்பட தீப ஆராதனை நடைபெற்றது. பின்பு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் பன்னிரு திருமுறை, புத்தகங்கள் ஏந்தி ஆடையநாயகி அம்பால் ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் இருந்து பறப்பட்டனர். பின்பு சிவ வாத்தியம்முழங்க, மங்கள நாதஸ்வர இசையோடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மலையாண்டி கோவில் வந்தடைந்து.

பின்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு கூடிகோலாட்டம் மற்றும் கும்மியாட்டத்துடன் அங்கிருந்து புறப்பட்டு புதுப்பட்டி நகை கடை வீதி, அண்ணாசிலை ,பேருந்து நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தனர். இதில் முக்கிய வீதிகளின் வழியாக வரும் பொழுது ஏராளமானவர்கள் அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.